SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!

1458
18/01/2023

உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, தனது அமைச்சக அதிகாரிகளுடன் இன்று ஹெலிகாப்டரில் சென்றார். தலைநகர் கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி என்ற பகுதி அருகே வந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மழலையர் பள்ளி அருகே நிலைத் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உள்துறை இணை அமைச்சர், அமைச்சக அதிகாரிகள், பள்ளி குழந்தைகள் 2 பேர் என மொத்தம் 16 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்