SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

துருக்கியில் குண்டுவெடித்து 6 பேர் பலி: 50 பேர் படுகாயம்

705
14/11/2022

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பிரபலமான கடைவீதியில் மக்கள் கூட்டத்தின் நடுவே குண்டுவெடித்ததால் பெரும் பீதி ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. துருக்கின் இஸ்தான்புல் நகரில் மிகவும் பிரபலமான தஸ்கிம் சதுக்கத்தின் அருகே இஸ்திக்லால் அவென்யூ பகுதி அமைந்துள்ளது. இங்கு சாலையின் இருபுறமும் பல்வேறு கடைகள், உணவகங்கள் அமைந்திருக்கும். இதனால் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். நேற்று விடுமுறை தினம் என்பதால் வழக்கம் போல் மக்கள் கடைவீதியில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மாலை 4.20 மணி அளவில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். உடனடியாக அங்கிருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டு, மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்