SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்..டெடிபேர்..தாஜ்மஹால்..!!: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது..!!

307
28/05/2022

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62ஆவது பழக்கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் நீலகிரி காலநிலையில் விளையும் பேரி, பிளம்ஸ், ஊட்டி ஆப்பிள், துரியன், பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழங்களும், அழிவு நிலையில் உள்ள டவுட்டு பழம், ரேகன் பழம், சீதா உள்ளிட்ட பழங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர். பழங்களால் ஆன கழுகு, டெடிபேர், புலி, டிராகன், மீன், தாஜ்மஹால், கோயில் தேர் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு மெட்ரிக் டன் கருப்பு மற்றும் பச்சை திராட்சை பழங்களால் வடிவமைக்கப்பட்ட கழுகு மற்றும் கரடி வடிவமைப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

  • same-sex-27

    மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்