SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வலியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துவிட்டது Sarco Capsule எந்திரம்!: ஒரு நிமிடத்தில் உயிரை பறிக்குமாம்..!!

4116
08/12/2021

தற்கொலைகளை தடுத்து நிறுத்த பல்வேறு நாடுகள் போராடி வரும் நிலையில், வழியில்லாமல் தற்கொலை செய்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நவீன இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் கருணை கொலை சட்டபூர்வமாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணை கொலை அமைப்புகளின் சேவைகள் மூலம் தற்கொலை செய்துகொண்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கருணை கொலை ஆர்வலரும் டாக்டருமான பிலிப், வலியே இல்லாமல் தற்கொலை செய்துகொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். Sarco capsule என்று பெயரிடப்பட்டுள்ள சவப்பெட்டி வடிவிலான இயந்திரத்தில் படுத்துக்கொண்டு பொத்தான் ஒன்றை அழுத்தினால் அடுத்த ஒரு நிமிடத்தில் வலியற்ற மரணம் நிச்சயம்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்