SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யமுனை நதியில் சாத் பூஜை!: பொங்கி வழியும் ரசாயன நுரையை பொருட்படுத்தாமல் புனித நீராடிய மக்கள்..!!

1109
08/11/2021

டெல்லியில் யமுனை ஆற்றில் பொங்கி வரும் ரசாயன நுரையை பொருட்படுத்தாமல் மக்கள் சாத் பூஜையை ஒட்டி நீராடி வருகின்றனர். வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று சூரியனை வழிபடும் சாத் பூஜை. சூரியனுக்கு நன்றி கூறும் இவ்விழா 4 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டில் சாத் பூஜை இன்று தொடங்கியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் நீர் நிலைகளில் மக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகின்றனர். டெல்லியில் கலிந்தி கஞ்ச் அருகே யமுனை ஆற்றில் ரசாயன நுரை பொங்கி வழிந்தது. இதனை பார்ப்பதற்கே அச்சம் ஏற்பட்ட நிலையில் ரசாயன நுரை பற்றி சற்றும் கவலைப்படாமல் மக்கள் யமுனை நதியில் புனித நீராடினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்