SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யாவின் 325வது கடற்படை தின கொண்டாட்டம்!: பார்வையாளர்களை கவர்ந்த போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு..!!

1195
26/07/2021

ரஷ்யாவில் கடற்படை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. கப்பல்படை தொடங்கப்பட்டதன் 325வது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் ரஷ்யாவில் களைகட்டின. கடற்படை தினத்தை முன்னிட்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பின்லாந்து வளைகுடா பகுதியில் போர் கப்பல்கள், கண்காணிப்பு கப்பல்கள், நீர் மூழ்கிகள் மற்றும் கடற்படை விமானங்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. நடுக்கடலில் நடைபெற்ற அணிவகுப்பினை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டார். ரஷ்ய கடற்படை தின கொண்டாட்ட அணிவகுப்பில் 40 போர் கப்பல்கள், 45 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய மெய்சிலிர்க்க வைக்கும் சாகசங்களை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்