SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புல்டோசர் ஏற்றியும், தீயிட்டு எரித்தும் ரூ.163 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை அழித்த அசாம் முதல்வர்..!!

490
19/07/2021

அசாம் மாநிலத்தில் போதைப்பொருட்களை ஒழிக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்பட்டு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுகின்றன. போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த ஓரிரு மாதங்களில் 170 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின், கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருட்கள் அனைத்தும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் அழிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் திபு மற்றும் கோலாகாட் பகுதியில் சில வகைப் போதைப்பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. போதைப்பொருட்களுக்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நெருப்பு வைத்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்