SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

28-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

1355
28/04/2021

எங்கே போனது விதிமுறை? கொரோனா தொற்றால் இறக்கும் நோயாளிகளின் சடலங்களின் அருகே அவர்களின் குடும்பத்தினர் கூட செல்ல முடியாத அளவுக்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது. அவர்களின் இறுதிச்சடங்குகளை சுகாதார பணியாளர்களே செய்து வந்தனர். இப்போது பாதிப்பும், பலியும் அதிகமாகி விட்டதால் இந்த விதிமுறை காற்றில் பறந்து விட்டது. பாதுகாப்பு உடைகளில் சுற்றப்பட்டு, உறவினர்களிடமே சடலங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. பலி எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், மயானங்களில் எரியூட்ட சடலங்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுகின்றன.அப்படி வைக்கப்பட்ட ஒருவரின் சடலத்தைத்தான் இந்த நாய் பதம் பார்க்கிறது. உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் நடந்த அவலம்தான் இது. இதில், இறந்தவரின் முகத்தின் ஒரு பகுதியை நாய் கடித்து குதறி விட்டது. இதை பார்த்த குடும்பத்தினர் வேதனை தாங்காமல் கதறி அழுதனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்