SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

568
20/04/2021

விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை படைத்திருக்கும் நாசா, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக சிறிய ரக ஹெலிகாப்டரை பறக்கச்செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர்-ஐ அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. பெர்சவரன்ஸ் ரோவர் உடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. தற்போது இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. ஒரு நிமிடத்திற்கும் குறைவாக சுமார் 3 மீட்டர் வரை ஹெலிகாப்டர் பறந்த நிலையில், நாசா விஞ்ஞானிகள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்