SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!

1190
08/04/2021

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கும் நாடு பிரேசில். அங்கு கொரோனா பாதிப்பு ஒன்றரை கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனாரோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார். இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக அங்கு கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாமல் ஆஸ்பத்திரியிலேயே உடல்களை கிடத்தி வைக்கும் அவல நிலையும் அங்கு உள்ளது. இந்த நிலையில் பிரேசிலில் வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 195 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து கடந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்