SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்

668
03/03/2021

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிக்கப்பட்டனர். நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளிக்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். வகுப்பறைகளுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் மாணவிகளை சிறைபிடித்த பயங்கரவாதிகள் லாரிகளை கொண்டு வந்து அதில் மாணவிகளை ஏற்றி கடத்திச்சென்றனர். 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தி செல்லப்பட்டதாக பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.‌ அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி, கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை பத்திரமாக மீட்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.‌ தொடர்ந்து, பேச்சுவார்த்தையின் முடிவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிப்பதற்கு பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டனர். அதன்படி பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 279 மாணவிகளும் நேற்று விடுவிக்கப்பட்டதாக ஜம்பாரா மாகாண கவர்னர் பெல்லோ மாதவல்லே அறிவித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்