SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!

313
01/03/2021

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்ததால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. மியான்மரில் பிப்ரவரி 1ம் தேதி ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிராக மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். யாங்கூன், தாவெய், மாண்டலே ஆகிய முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியத்துடன் துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் 18 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கொலைவெறி தாக்குதல் நடத்தும் காட்சிகள் பலவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்