SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

1062
25/02/2021

ஈக்வெடார் நாட்டில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. ஈக்வெடாரில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகளை அடைத்து வைப்பதால் கைதிகள் குழுக்களாக பிரிந்து வன்முறைகளில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஈக்வெடாரில் உள்ள முக்கியமான 3 சிறைகளில் கைதிகள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். சக கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொண்ட வன்முறை கும்பல் சிறைக்கும் தீ வைத்தனர். கலவரத்தை ஒடுக்க சிறை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. 3 கலவரங்களிலும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக ஈக்வெடார் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் சிறைச்சாலை முன்பு கதறி அழுத காட்சி காண்போரையும் கலங்க செய்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்