SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

369
25/01/2021

சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தால் பூமிக்கு அடியில் சிக்கிய 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சீனாவின் சாந்தோம் மாகாணத்தில் யாண்டைன் நகரில் உள்ள தங்க சுரங்கத்தில் கடந்த 10ம் தேதி நேரிட்ட விபத்தில் 22 தொழிலாளர்கள் பூமிக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்ககூடும் என கருதப்பட்ட நிலையில் தான் பூமிக்கு அடியில் 12 தொழிலாளர்கள் உயிருடன் இருப்பது கடந்த 17ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் உயிரிழக்க எஞ்சியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்திய மீட்பு குழுவினர், 2000 அடி ஆழத்தில் சிக்கியிருந்த 11 பேரை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களில் சிலரது நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் சிக்கிய 22 தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழக்க 11 பேர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சிய 10 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • labor8

    ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

  • transgender8

    நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

  • 08-03-2021

    08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்