SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

471
19/01/2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்து 48 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா தற்போது உலகின் 219 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதும் கொரோனா வைரஸ் உருமாறி வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து, உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 48 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 ஆயிரத்து 826 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 ஆயிரத்து 305 பேரும், ஜெர்மனியில் 665 பேரும், இங்கிலாந்தில் 599 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • labor8

    ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

  • transgender8

    நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

  • 08-03-2021

    08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்