SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

345
12/01/2021

புனே சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வரும் 16ம் தேதி முதல் போடப்படுகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று அதிகாலையில் மகாராஷ்டிராவின் புனே சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கின. 8 விமானங்கள் மூலம் இந்த கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன. முதலாவது விமானம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த இந்த தடுப்பூசிகள், பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னைக்கும் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன. புனே சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மொத்தம் 5.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன. இவை 10 கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்