SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாண் சட்டத்தை ஆதரிக்க விடுவோமா!: அரியானாவில் வேளாண் சட்ட ஆதரவு நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்தை சூறையாடிய விவசாயிகள்..!!

505
11/01/2021

வேளாண் சட்டங்களை ஆதரித்து, அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பங்கேற்க இருந்த கூட்ட அரங்கை விவசாயிகள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில், பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் 47 நாட்களாக தொடர்ந்து நேற்றும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை ஆதரித்து ‘கிஷான் மகாபஞ்சாயத்’ என்ற நிகழ்ச்சி, அரியானா பாஜ முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் சண்டிகரின் கர்னல் மாவட்டம் கைம்லா கிராமத்தில் நேற்று நடந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டிக்கும் விதமாக அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகள், விழா மேடையில் இருந்த பேனர்களை விவசாயிகள் கிழித்தெறிந்தனர். கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடி அடியும் நடத்தினர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்