SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணை கவர்ந்த பாரம்பரிய வாகனங்களின் கண்காட்சி : உலகின் முதல் மோட்டார் வாகனம் பங்கேற்றது!!

908
11/01/2021

மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்’ சார்பில் பாரம்பரிய கார்கள் கண்காட்சி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. காவல்துறை ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் இதில் பங்கேற்று, கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார்.இக்கண்காட்சியில் 1886-ம் ஆண்டு உலகில் முதன்முதலில் பென்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார், 1896-ம் ஆண்டு போர்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் மொத்தம் 65 பாரம்பரிய கார்கள், 25 பாரம்பரிய இருசக்கர வாகனங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பாரம்பரிய வாகன விரும்பிகள் பார்வையிட்டுச் சென்றனர். பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளுடன் வந்து, பாரம்பரிய கார்களின் சிறப்புகள் மற்றும் வரலாறுகள் குறித்து தங்கள் குழந்தைகளுக்கு விளக்கினர். இளைஞர்கள் பலர் தங்கள் செல்போன்களில் செல்ஃபி படம் எடுத்துக்கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்