SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

1420
02/12/2020

பிரான்சில் உடல்பருமனால் பாதிக்கப்பட்ட நபரை வீட்டினை உடைத்து மீட்புப் படையினர் கிரேன் மூலமாக மீட்டுள்ளனர். தெற்கு பிரான்சில் உள்ள பெர்பிக்னன் (Perpignan) பகுதியைச் சேர்ந்த அலைன் பி (Alain P) கடந்த ஆண்டு நேர்ந்த விபத்தின் காரணமாக வீட்டில் படுத்தபடுக்கையாக இருந்துள்ளார்.இதில் அவரது உடல் எடை 250 முதல் 300 கிலோ வரை கூடியது. இந்நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மாண்ட்பெல்லிய ர்(Montpellier) மருத்துவமனை முன்வந்தது.இதையடுத்து 50க்கும் மேற்பட்ட மீட்புபணி வீரர்கள் களம் இறங்கி அவரது வீட்டின் ஒருபகுதியை உடைத்து, கூண்டுபோன்ற அமைப்பில் அவரை வைத்து கிரேன் மூலமாகத் தூக்கி இறக்கினர். பின்னர் அந்த குண்டு நபர் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்