SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

452
01/12/2020

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளிக்கும் சென்னை போராட்டத்தில் பங்கேற்க வந்த பாமகவினர் பெருங்களத்தூரில் மின்சார ரயில்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் பாமக-வினர் ரயில் மீது கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே பாமக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை நோக்கி வந்த பாமக-வினரை போலீசார் பெருங்களத்தூர் அருகே தடுத்து நிறுத்தினர். முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் திரும்பிச்செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பாமக-வினர் ஜி.எஸ்.டி சாலையின் இருபுறமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்