SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

347
01/12/2020

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளா்ச்சிக் கவுன்சிலின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 43 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜம்முவில் 18 தொகுதிகளும், காஷ்மீரில் 25 தொகுதிகளும் உள்ளன. மொத்தம் 321 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் 125 பேர் ஜம்முவிலும், 196 பேர் காஷ்மீரிலும் போட்டியிடுகின்றனா். மாவட்ட வளா்ச்சிக் கவுன்சிலின் இரண்டாம் கட்ட தேர்தலுடன் 83 தொகுதிகளில் கிராமத் தலைவா் தேர்தலும் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 223 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 2,142 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஜம்முவில் 837 வாக்குப்பதிவு மையங்களும், காஷ்மீரில் 1,305 வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று அம்மாநில தேர்தல் ஆணையா் கே.கே.சா்மா நேற்று தெரிவித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்