SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

351
01/12/2020

ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானி மோஷென் ஃபக்‍ரிஷாதேவின் உடல், டெஹ்ரான் நகரில் அடக்‍கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக அவரது உடல் அந்நாட்டு ராணுவத்தால் நகரின் முக்‍கிய பகுதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் ஈரான் ராணுவ அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் ஹதாமி உள்ளிட்ட தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். இஸ்ரேல் அரசின் சதித்திட்டத்தில் மோஷென் ஃபக்‍ரிஷாதே கொல்லப்பட்டதாக ஈரான் குற்றஞ்சுமத்தியுள்ள நிலையில், அது குறித்து பதிலளிக்‍க இஸ்ரேல் மறுத்துவிட்டது. ரகசிய அணு ஆயுதத் திட்டத்தின் சூத்திரதாரி என்று மேற்கு மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தால் நீண்டகாலமாக சந்தேகிக்கப்படும் ஃபக்ரிசாதே, வெள்ளிக்கிழமை தெஹ்ரான் அருகே ஒரு நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்