SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் ரயிலில் அடிபட்டு முன்னங்கால்களை இழந்த தெருநாய்க்கு எதிர்பாராத புதுவாழ்வு

507
19/11/2020

ரயிலில் அடிபட்டுக் காலை இழந்த தெருநாய்க்கு எதிர்பாராப் புதுவாழ்வு கிடைத்துள்ளது. ஓராண்டு சிகிச்சைக்குப்பின் , செயற்கைக் கால்களைக் கொண்டு நடக்கப் பழகிய அது ...இப்போது பிரிட்டனில் புது வாழ்க்கையைத் தொடங்கவிருக்கிறது.இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் ஃபரியாபாத் நகர ரயில் நிலையம் ஒன்றில், அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது அந்த 3 வயது நாய்.அதைக் காவல்துறை அதிகாரிகள் விலங்குநலக் காப்பகத்திடம் ஒப்படைத்தனர்.ஏராளமான ரத்தத்தை இழந்த நாய், மற்றொரு நாயிடமிருந்து ரத்தம் ஏற்றப்பட்டதால் பிழைத்துக்கொண்டது.ஆனால் அதன் கால்களைத் துண்டிக்கவேண்டிய நிலை. அதன் பின்னங்கால்களும் அடிபட்டிருந்தன.பின் உடல்நிலை தேறிய நாய், தனது தாடையைக் கொண்டு செயல்படத் தொடங்கியது. நாயின் நிலையைக் காணொளியாக்கி வெளியிட்டனர் விலங்கு நலக் காப்பகத்தார். அது பரவி, நாய்களுக்கான உலகளாவிய மீட்பு அமைப்பை எட்டியது.லண்டனில் வாழும் இந்தியர் ஒருவர் அதற்கு செயற்கைக் கால்கள் பொருத்த நிதி உதவி அளிக்க முன்வந்தார்.சென்ற ஜூலை மாதம் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கால்களைப் பெற்றது, Rocky என்ற புதுப்பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த நாய்.இப்போது, அதை லண்டன்வாசி ஒருவர் தத்தெடுக்க முன்வந்திருக்கிறார். அதனையடுத்து, இன்று Rocky புதுடில்லியிலிருந்து லண்டனுக்கு விமானத்தில் புறப்பட்டது.Rocky போன்ற காலிழந்த ஒரு நாய்க்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர், விலங்கு நலக் காப்பகத்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்