SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா ஊர்வலம்: கொரோனா பரவலால் அரண்மனை வளாகத்தில் எளிமையாக நடந்த யானை ஊர்வலம்..!!

425
27/10/2020

கொரோனா பரவல் காரணமாக உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா ஊர்வலம் அரண்மனை வளாகத்திலேயே மிகவும் எளிமையாக நடந்தது. இதனை முதல்வர் எடியூரப்பா தொடங்கிவைத்தார். இந்த ஊர்வலம் 26 நிமிடத்தில் நிறைவடைந்தது. கர்நாடகத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் மைசூரு தசரா முக்கியமானதாகும். உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 10 நாட்கள் கோலாகலமாகவும், பாரம்பரியமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழா எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதுபோல் கொரோனா களப்பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், செவிலியர்களை கவுரவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 410-வது தசரா விழா கடந்த 17ந்தேதி தொடங்கியது. மைசூரு அருகே சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மலர்தூவி டாக்டர் மஞ்சுநாத் முதல்-மந்திரி எடியூரப்பா முன்னிலையில் தசரா விழாவை தொடங்கிவைத்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்