SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

310
21/10/2020

நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று வீர வணக்கநாளை யொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. உயிர்நீத்த போலீசாருக்கு அந்தந்த பகுதி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர். கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காவல்துறையினர் கருப்பு பட்டை அணிந்து நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காவலர் வீரவணக்க நாளையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pramos1

    கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

  • pamaka1

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

  • jammuele1

    ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

  • nuclearscientist1

    ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்