SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..!!

563
20/10/2020

2,000 ஆண்டுகள் பழமையான பூனை வடிவத்திலான மலைப்பாதை ஒன்று பெரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, பழங்கால நாகரீகத்தில் சிறந்து விளங்கும் நாடு. மச்சு பிச்சு போன்ற உலகின் பாரம்பரிய சின்னங்களை கொண்ட நாடு. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பூனை வடிவிலான மலைப்பாதை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தலைநகர் லிமாவுக்கு அருகே உள்ள மலையில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரம்மாண்ட அளவிலான பூனையின் வடிவம் செதுக்கப்பட்டிருக்கலாம் என கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இயற்கை சீற்றங்கள் மற்றும் கால மாற்றத்தின் காரணமாக மறைந்து போன சுமார் 120 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாதையை, ஆராய்ச்சி ஒன்றிற்காக சுத்தம் செய்யும் போது தொல் பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pramos1

    கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

  • pamaka1

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமக-வினர் சரமாரி கல்வீசி தாக்குதல்...புகைப்படங்கள்!!

  • jammuele1

    ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்!: 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

  • nuclearscientist1

    ஈரானில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியின் உடல் டெஹ்ரான் நகரில் அடக்‍கம்!: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!!

  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்