SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..!!

482
20/10/2020

உ.பி., பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் 13 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அக். 15 முதல் தொடர்ச்சியாக பள்ளிகளைத் திறக்க சில வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் இரண்டு ஷிப்ட்களில் நடத்தப்படுகிறது. 9 மற்றும் 10 வகுப்புகள் காலை 8.50 முதல் 11.50 வரையிலும், 11 மற்றும் 12 வகுப்புகள் 12.20 முதல் 3.20 வரை நடத்தப்படுகிறது. பள்ளியைத் திறக்கும்போது கொரோனா வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அதேபோல், பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டன. வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டது. ஒரு மாணவர் மட்டுமே பெஞ்சில் அமர ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களின் நெரிசலைத் தடுக்க, பள்ளியின் அனைத்து வாயில்களும் திறக்கப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்