SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாண் சட்ட சர்ச்சை பற்றிய பேச்சுக்கு மத்திய அமைச்சர் வராததால் பஞ்சாபில் தொடரும் போராட்டம்: சட்ட நகல்களை கிழித்து வீசிய விவசாயிகள்

352
15/10/2020

மத்திய அரசின் அழைப்பை ஏற்று, வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கு சென்ற விவசாய அமைப்பினர், மத்திய அமைச்சர் வராததால் கூட்டத்தை புறக்கணித்தனர். சமீபத்தில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. இதனால், விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, பஞ்சாப்பில் உள்ள 30க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தனர். இதன்படி, டெல்லியில் மத்திய வேளாண் அமைச்சக அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், மத்திய அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வராததால் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும், அங்கேயே வேளாண் சட்ட நகல்களை கிழித்து எறிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakisthan21

    ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

  • kasirangaa21

    கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

  • kamaladance21

    அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

  • thirupati21

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

  • police21

    காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்