SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய வெடிகுண்டு!: 75 ஆண்டுக்கு பிறகு வெடித்து சிதறியது..!!

2132
14/10/2020

ரண்டாம் உலக போரில், ஜெர்மன் போர்க்கப்பலை அழிக்க பயன்படுத்தப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய வெடிகுண்டு ஒன்று போலந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 5400 கிலோ கிராம் எடை கொண்ட வெடிகுண்டை செயலிழக்க செய்தபோது வெடித்து சிதறியது. இரண்டாம் உலகப்போரின் போது 1945ம் ஆண்டு பிரிட்டனின் ராயல் விமான படையினர், ஜெர்மன் போர்க்கப்பல் லுட்ஸோவை அழிக்கும் நோக்கத்தில், 6 மீட்டர் நீளம் கொண்ட 5400 கிலோ கிராம் எடை கொண்ட மிகப்பெரிய வெடிகுண்டை வீசினர். இந்த வெடிகுண்டில் 2400 கிலோ கிராம் அளவுக்கு வெடிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. 'பெரிய பையன் ' என்று பெயரிடப்பட்ட இந்த வெடிகுண்டு மிகச்சிறிய அளவில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாகும். ஜெர்மன் - போலந்து எல்லையில் உள்ள ஸ்வினூஜ்ஸி நகரில் கப்பல் போக்குவரத்துக்கு பயன்படும் பியஸ்ட் கால்வாயில், கடந்த ஆண்டு இந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்