SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா நோயாளிகளுக்காக 3000 கிலோ ஆப்பிள்கள் வைத்து சிறப்பு பூஜை!: அகமதாபாத் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலில் வைத்து அர்ச்சனை..!!

379
14/10/2020

கொரோனா நோயாளிகளுக்காக 3 ஆயிரம் கிலோ ஆப்பிள்களை வைத்து சிறப்புப் பூஜை நடத்தி, அகமதாபாத் கோயிலில் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அகமதாபாத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ஸ்வாமி நாராயண் மந்திர் உள்ளது. இங்கு நாரயண தேவர், லட்சுமி நாரயண தேவர் ஆகிய இரு தெய்வங்கள் பிரதானமாக உள்ளன. இக்கோயில் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் ஸ்வாமிநாராயண் கோயில் மூடப்பட்டது. அரசு பொதுமுடக்கத் தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், நவராத்திரியை முன்னிட்டு ஸ்வாமி நாராயண் மந்திர் நேற்று திறக்கப்பட்டது. இந்நிலையில், கோயிலில் கொரோனா நோயாளிகளுக்காக 3 ஆயிரம் கிலோ ஆப்பிள்களை வைத்து சிறப்புப் பூஜை நடத்தி, வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக சிவப்பு, பச்சை மற்றும் தங்க நிறங்களில் ஆப்பிள்கள் சிறு முக்கோண வடிவில் அடுக்கப்பட்டன. அவை அனைத்தும் பூஜைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு மரப் படிகளில் காட்சிப்படுத்தப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்