SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புனேவில் பயங்கர வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை..!!

465
01/10/2020

புனே அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பொருட்கள் கருகின. மகாராஷ்டிர மாநிலம் புனே-சோலாப்பூர் சாலையில் குர்கும்ப் தொழில் வளாகம் உள்ளது. இங்குள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென ஆலையின் அனைத்து இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. ஊழியர்கள் அவசரம் அவசரமாக ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பொருட்கள் எரிந்துவிட்டதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மே மாதம் ஒரு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெருமளவில் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்