SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உ.பி.யில் வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்: குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலுக்கும் போராட்டம்..!!

3027
30/09/2020

உத்தரப்பிரதேசத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டியலினத்தவர்களுடன் ஏராளமான மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், ஆதிக்க சாதியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வகையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டியலின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் ஏராளமான பெண்கள் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காவல்துறையினருக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்