SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போட்ஸ்வானாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம்!: பாக்டீரியா நோயால் 2 மாதங்களில் 34 யானைகள் உயிரிழப்பு..!!

352
30/09/2020

போட்ஸ்வானாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் ஒரு வகை பாக்டீரியா நோயால் முப்பதுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் மர்ம நோயால் உயிரிழந்தன. இதையடுத்து அண்டை நாடான ஜிம்பாப்வேயிலும் ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில் 34 யானைகள் இறந்தன. ஹேமராஜிக் செப்டிகேமியா என்கிற ஒருவகை பாக்டீரியா நோயால் யானைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இறந்த யானைகளின் ஈரல் மற்றும் உறுப்புகள் வீங்கியிருந்ததாகவும், இவற்றின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே யானைகள் இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் வன விலங்குகள் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்