SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல்!: பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு..!!

336
30/09/2020

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்துள்ளனர். டெய்கண்டி மத்திய மாகாணத்தில் கர்ஜான் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்ததை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆனாலும் தலீபான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கத்தார் நாட்டின் தோஹா நகரில் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தபோதிலும், குண்டுவெடிப்பு தாக்குதல்களும், துப்பாக்கி சூடு தாக்குதல்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்