SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

472
29/09/2020

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 9 மாதங்களாகியும் கொரோனாநோய்த் தொற்றின் தாக்கமும் பரவலும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அந்த வகையில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,002,389ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் அந்த வைரஸால் இதுவரை 3,33,04,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், 24,634,298 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 76,67,979 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 65,129 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்