SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

495
23/09/2020

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 24 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் பரவலாக 240 மி.மீ மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையின் ஆண்ட்கிரி, ஜொஜேஷ்வரி, கோரிஹன், மலட், போரிவாலி உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை புரட்டி எடுத்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு வழித்தடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் உள்ளூர் ரயில்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மும்பை மாநகரில் அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்