SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள்!: அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..பக்தர்கள் பரவசம்..!!

502
21/09/2020

திருப்பதி திருமலையில் நடைபெற்றுவரும் ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்றிரவு 7 மணி முதல் 8 மணி வரை உற்சவர் மலையப்ப சுவாமியின் அன்ன வாகன சேவை நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 2வது நாளான நேற்று காலை 8.30 மணிக்கு துவங்கி 9.30 மணி வரை கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமியின் சின்ன சேஷ வாகன சேவை நடைபெற்றது. பிரம்மோற்சவ வாகன சேவை கண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக ரங்கநாயகர் மண்டபத்தை அடைந்த உற்சவர் மலையப்ப சுவாமி, சர்வ அலங்கார திருக்கோலத்தில் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு உற்சவருக்கு தூப தீப நைவேத்தியம் நடத்தப்பட்ட நிலையில் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ரங்கநாயகர் மண்டபத்தில் சின்ன சேஷ வாகன சேவை நடைபெற்றது. மதியம் பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. ஏழுமலையான் கோவிலில் இருக்கும் ரங்க நாயக்கர் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனத்தின் போது இளநீர், பால், தேன், சந்தனம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்கள் மூலம் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்