SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராசல் கைமா மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4,868 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட புதிய உணவகம்: சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது..!!

410
16/09/2020

ராசல் கைமா மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4,868 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய உணவகம் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது. அமீரகத்தின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரம் ராசல் கைமா ஆகும். இங்கு உள்ள ஜெபல் ஜைஸ் மலைப்பகுதியானது பல்வேறு வகைகளில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த மலைப்பகுதி மொத்தம் 6,500 அடி உயரமானதாகும். தற்போது இந்த மலைப்பகுதியில் ஒரு முக்கிய அம்சமாக உணவகம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உணவகம் அடுத்த மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த உணவகம் மிகவும் உயரமான மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் உணவகம் என்ற பெருமையை பெறுகிறது. இந்த உணவகம் கடல் மட்டத்தில் இருந்து 1,484 மீட்டர் (4,868 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய உணவகம் ஜெய்ஸ் சாகச மையத்தின் அருகாமையில் அமைந்து இருக்கிறது. ஹஜர் மலைத்தொடரில் பள்ளத்தாக்குகள் மத்தியில் மிகவும் ரம்மியமான சூழலில் இந்த உணவகம் அமைகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்