SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லிபியாவில் அகதிகள் வந்த படகு ஜ்வாரா கடல்பகுதியில் கவிழ்ந்து விபத்து!: 24 பேர் பரிதாப பலி...பலர் மாயம்..!!

385
16/09/2020

லிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியானார்கள். உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்நிலையில் லிபியாவின் ஜ்வாரா கடல்பகுதியில் அகதிகளை ஏற்றிக்கொண்டு 3 சிறிய படகுகள் சென்று கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் படகு ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் லிபிய கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 24 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்