SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

2538
05/08/2020

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று பகல் 12.15 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக, காலை 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி, லக்னோவுக்கு வந்தார். பின், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தார். அயோத்தியில் அவரை உ.பி.கவர்னர் ஆனந்திப்பென், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். பிரதமர் மோடி முதலில் அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். பின்னர், ராமஜென்ம பூமியில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குத் தீபாராதனை காட்டி வழிபட்டார். தொடர்ந்து, அங்குச் சிறப்புப் பூஜைகளையும் செய்தார். பின்னர், அந்த வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார். இதையடுத்து, பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் சென்றனர். வேத மந்திரங்கள் முழங்கப் பூமி பூஜை தொடங்கியது. முகக் கவசம் அணிந்தபடியே பிரதமர் மோடி, கவர்னர் ஆனந்திப்பென், முதல்வர் ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, ராமர் கோயிலுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், விழாவையொட்டி சிறப்புத் தபால்தலைகளைப் பிரதமர் வெளியிட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • supersonic30

    இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!: 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது..புகைப்படங்கள்..!!

  • up30

    உ.பி.யில் வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்: குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலுக்கும் போராட்டம்..!!

  • elephant30

    போட்ஸ்வானாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம்!: பாக்டீரியா நோயால் 2 மாதங்களில் 34 யானைகள் உயிரிழப்பு..!!

  • newyark30

    கொரோனாவின் தாக்கம் குறைந்தது!: நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • road30

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல்!: பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்