SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

2656
03/08/2020

இத்தாலியில் கியூசெப்பே பேட்டெர்னோ (Giuseppe Paterno) என்பவர், தனது 96-வது வயதில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.இத்தாலியை சேர்ந்த 96-வது முதியவர் கியூசெப்பே பேட்டெர்னோ (Giuseppe Paterno). இவர் வறுமை காரணமாக தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார்.கடற்படை, ரயில்வே என வேலைக்கு சேர்ந்த கியூசெப்பே பேட்டெர்னோ அதிலிருந்து ஓய்வு பெற்றார்.எனினும் வயதான காலத்தில் வீட்டில் இருந்து விடலாம் என எண்ணாமல் விட்ட படிப்பை மீண்டும் தொடர எண்ணம் எழுந்துள்ளது.மீண்டும் படிப்பை தொடர நினைத்த கியூசெப்பே பேட்டெர்னோ அதற்கான கல்லூரியில் சேர்ந்துள்ளார்.வயது என்பது மனதிற்கு தான் என பொருட்படுத்ததாமல் இன்றைய தலைமுறையோடு போட்டியிட்டு வென்று காட்டியுள்ளார்.து தொடர்பாக அவர் கூறும்பொழுது, நான் இதை செய்யவேண்டும் எனும் எண்ணம் என் மனதில் இருந்தது. புத்தங்கள் எழுத வேண்டும் என ஆசை படுகிறேன் என தெரிவித்துள்ளார்.அங்குள்ள பாலெர்மோ பல்கலைக் கழகத்தில் வரலாறு மற்றும் தத்துவ பாடப்பிரிவில் பட்டம் பெற்ற முதியவருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • supersonic30

    இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!: 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது..புகைப்படங்கள்..!!

  • up30

    உ.பி.யில் வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்: குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வலுக்கும் போராட்டம்..!!

  • elephant30

    போட்ஸ்வானாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம்!: பாக்டீரியா நோயால் 2 மாதங்களில் 34 யானைகள் உயிரிழப்பு..!!

  • newyark30

    கொரோனாவின் தாக்கம் குறைந்தது!: நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • road30

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல்!: பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்