SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

1016
05/06/2020

கொரோனா வைரஸானது தற்போது அனைத்து இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய பாதிப்பில் இருந்து இந்திய மக்கள் மீள்வதற்குள், வெட்டுக்கிளி வடிவில் மற்றொரு ஆபத்து கிளம்பிவிட்டது. இதன் சராசரி எடை 2 கிராம்தான். ஆனால், பெரும் படையுடன் திரண்டு வரும் இவை ஏற்படுத்திய அழிவுகள் ஏராளம். இன்று நேற்றல்ல... 2 நூற்றாண்டுகளாக இந்த பிரச்னையை இந்தியா சந்தித்துள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போதும் வெட்டுக்கிளிகளை அழிக்க பல்வேறு உத்திகள் கையாளப்பட்டிருக்கின்றன. தற்போது இத்தகைய வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட நாடுகளில் வளம் வந்து கொண்டிருக்கிறது. 13 நாடுகள் கடந்து வரும் வெட்டுக்கிளிகள், இந்தியாவுக்குள் ராஜஸ்தான் வழியாக நுழைகின்றன. ஒரு வெட்டுக்கிளியின் சராசரி எடை 2 கிராம். தொடர்ந்து 150 கி.மீக்கு பெருங்கூட்டமாக பறக்கும். சராசரியாக ஒரு சிறிய கூட்டத்தில் சுமார் 2 லட்சம் வெட்டுக்கிளிகள் இருக்கும். அவை ஒரு நாளில் தனது எடையளவு உணவை உட்கொள்ளும். இந்த உணவு 10 யானை, 25 ஒட்டகம், 2,500 மக்கள் உண்ணும் உணவுக்கு சமமானது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • vettukili15

    மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்