SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

1337
28/02/2020

சவுதி அரேபியா என்றாலே அங்கு நிலவும் வெப்பம் தான் நினைவுக்கு வரும். அடுத்து, அங்குள்ள பாலைவனம் பிரபலமானது. இதனால் எப்போதும் கடுமையான வெப்பம் நிலவி வரும். ஆனால், ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’ பாடல் போல சவுதி அரேபியாவின் வடக்கு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த நாட்டின் வட பகுதியின் தட்பவெப்ப நிலை முற்றிலும் மாறியுள்ளது.இந்த பனிப்பொழிவை அங்குள்ள பொதுமக்கள் வியப்புடன் வரவேற்றுள்ளார்கள்.ஜோர்டானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள டபூக் பிராந்தின் ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகள் முற்றிலும் பனி படர்ந்து ரம்மியாக காட்சி அளிக்கிறது. சவுதி அரேபியாவில் வெப்பநிலை என்பது பல இடங்களில் இரவில் பூஜியத்திற்கு கீழ் செல்கிறது. 18 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் என உறைபனியாக சவுதி அரேபியா காணப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்