SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

1631
27/02/2020

கீழடி 6ம் கட்ட அகழாய்வில் முதல் கண்டுபிடிப்பாக ஒரு முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியை அடுத்த அகரம், கொந்தகை , மணலூர் உள்ளிட்ட இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொந்தகை பகுதியில் நடந்துவரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவையும் கிடைத்து வருகின்றன. ஏனெனில் அதனை முழுமையாக எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி தொல்லியல் தொகுதியில் இறந்தவர்களைப் புதைக்கும் இடமாக கொந்தகை இருந்திருக்கிறது. இப்பகுதியில் மேல்மட்டத்தைச் சுத்தம்செய்து ஆய்வைத் துவங்கிய நிலையில் சில முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் முதுமக்கள் தாழி ஒன்று கண்டறியப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்