SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

1446
21/02/2020

சீனாவின் வூகான் நகரில் தோன்றி உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 2000க்கும் அதிகமானோரை பலிவாங்கியுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 45 பேரும், மற்ற நாடுகளைச் சார்ந்த 27 பேரும் பயணித்த பேருந்து மத்திய சீன நகரமான வூகானில் இருந்து உக்ரைனின் கார்கிவ் நகருக்கு வந்தது. இதையடுத்து, ஆறு பேருந்துகள் மத்திய பொல்டாவா பிராந்தியத்தில் உள்ள நோவி சன்ஷாரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அப்போது, சீனாவிலிருந்து கரோனா வைரஸ் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களுக்கு வைரஸ் பாதித்துள்ளதாக தவறான பிரச்சாரங்களை நம்பி அங்கு கூடிய எதிர்ப்பாளர்கள் சாலையில் தீ வைத்தனர், பேருந்து மீது கற்களை வீசினர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானதால் காவல்துறையினரும் தேசியப் பாதுகாப்புப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-09-2020

    18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • birthdayceleb17

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

  • guinness17

    2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

  • amavasai17

    மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

  • modiji17

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்