SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

1203
21/02/2020

இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டெல்லி சாணக்யாபுரியில் உள்ள ஐ.டி.சி மௌரியா ஹோட்டலில் மனைவி மெலேனியாவுடன் தங்குகிறார். இதற்காக, ஹோட்டலில் பிரெசிடென்ட் சூட் பகுதி ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் 4,800 சதுர அடி கொண்ட இந்த அறையில்தான் டொனால்டு ட்ரம்ப்பும் அவரின் மனைவியும் தங்க இருக்கின்றனர். ஹோட்டலுக்குள் சென்றதும் 14 வது மாடியில் உள்ள இந்த அறைக்குச் செல்வதற்கு என்று தனி லிப்ட் உள்ளது. பிரெசிடென்ட் சூட்டில் இரு படுக்கை அறைகள், வரவேற்பு அறை, படிப்பறை, 12 இருக்கைகள் கொண்ட மயில்தோகை வடிவிலான டைனிங் ஹால், மினி ஸ்பா மற்றும் ஜிம் ஆகியவை உள்ளன. அறை முழுவதும் அழகு நிறைந்த கலை வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.மேலும், காற்றைச் சுத்தப்படுத்தும் கருவிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இதனால், ஹோட்டலில் சர்வதேச சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவீட்டுடன்கூடிய தரமான காற்று ட்ரம்ப் தம்பதிக்குக் கிடைக்கும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-09-2020

    18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • birthdayceleb17

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

  • guinness17

    2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

  • amavasai17

    மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

  • modiji17

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்