SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

2228
21/02/2020

கொரொனா வைரஸ் வராம பின்ன கெட்டி சட்டினி வைரஸ் அவரும்? கொரோனா வைரஸ் எவ்வாறு தொடங்கியது? இந்த வைரஸ் வுஹான் கடல் உணவு சந்தையில் இருந்து தோன்றியதாகத் தெரிகிறது, அங்கு மர்மோட்டுகள், பறவைகள், முயல்கள், வெளவால்கள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ்' உருவான, சீனாவின் வுஹான் நகரின், 'ஹுனான் கடல் உணவு சந்தை'யில் அதிகாரிகளும் மருத்துவர்களும் ஆய்வு செய்தனர். சந்தையில் அறுக்கப்பட்ட, ஏதோ ஒரு வன விலங்கிடமிருந்தே, உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, கொரோனா வைரஸ் பரவியுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, அந்தச் சந்தைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளனர்.அந்தச் சந்தையில் விதிமீறி உயிருடன் விற்கப்பட்ட வனவிலங்குகளின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில், 'நரி, ஓநாய், பாம்பு, முதலை, காட்டெலி, மயில், எறும்புத்தின்னி, ஒட்டகம், மான், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, முயல், காட்டுப்பூனை, கரடி, வவ்வால், உடும்பு' உள்ளிட்ட, 121 வன உயிரினங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.மேலும், 'ஆடு, மாடு, கோழி, பன்றி, முயல்' உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளும்; 'கரப்பான், பல்லி, புழுக்கள்' உள்ளிட்ட, புழு, பூச்சி வகைகளும் அந்த சந்தையில் விற்கப்பட்டன. சந்தைக்கு, உயிருடன் கொண்டு வரப்படும் வன விலங்குகள், பல நாட்கள் அடைத்து வைத்து விற்கப்பட்டுள்ளன. அந்த விலங்குகளில் ஏதோ ஒன்றிலிருந்தே இந்த வைரஸ் பரவி இருப்பதாக தெரிகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Netaji_Subhash _Chandra_Bose_Airport In  Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்