SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

1175
19/02/2020

அயர்ன் மேன் படத்தை பார்த்துவிட்டு நாமும் அயர்ன் மேன் போன்று பறக்க முடியாதா? என்று ஏங்கி தவித்தவர்கள் பலர் உண்டு. ஆனால், இப்போது அப்படி ஒரு விஷயம் சாத்தியம் ஆக போகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? கண்டிப்பாக நம்பித்தான் ஆக வேண்டும். ஜெட்மேன் துபாயில் உள்ள ஒரு குழு, ஒரு ஜெட் மூலம் ஆற்றல் பெற்று இயங்கும் இறக்கையை உருவாக்கி, அதன் மூலம் தொழில்நுட்ப உலகில் ஒரு முக்கியமான புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். அந்த இறக்கையை தன்னில் பொருத்தி கொண்ட ஒரு பைலட் ஒருவர் தரையில் இருந்து புறப்பட்டு பின்னர் மிக உயரமாக பறக்க தொடங்கினார். அப்போது, ஜெட்மேன் பைலட் வின்ஸ் ரெஃபெட் அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஸ்கைடைவ் துபாய் எனும் இடத்தில் உள்ள ஓடுபாதையில் நின்று கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 6,000 அடி உயரத்தில் பறந்தார். மிதப்பது, நிறுத்துவது, திரும்புவது மற்றும் சுழற்சி செய்வது போன்ற பல சாகச திறன்களையும் அவர் வெளிப்படுத்தினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்