SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கள நிலவரத்தை கண்டறிய ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப் பயணம்: ஷிகாரா சவாரி மூலம் தொடங்கிய வெளிநாட்டுத் தூதர்கள்

975
13/02/2020

வெளிநாட்டுத் தூதர்கள் 25 பேரை கொண்ட புதிய குழுவினர் ஜம்மு காஷ்மீரில் பயணம் செய்கின்றனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் விலக்கிக் கொண்டது. மேலும் அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து அங்குள்ள கள நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக வெளிநாட்டுத் தூதர்கள் 15 பேர் கடந்த மாதம் இங்கு பயணம் செய்தனர். இந்நிலையில் வெளிநாட்டுத் தூதர்கள் 25 பேரை கொண்ட இரண்டாவது குழுவினர் 2 நாள் பயணமாக நேற்று காஷ்மீர் வந்தனர். ஆப்கானிஸ்தான், ஆஸ்திரியா, கனடா, டென்மார்க், ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கென்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தூதர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று காலை 11 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையம் வந்திறங்கினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்