SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு

1977
28/01/2020

சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது வரை சுமார் 3 ஆயிரம் பேர் வரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 106 பேர் பலியாகி இருக்கிறார்கள்.மருந்து இல்லாமல் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அவல நிலை நீடிக்கிறது. கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சீனாவில் வெறும் 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டிமுடிக்க பக்காவாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குரிய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சீனாவில் நவீன முறையில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுவரும் இந்த கொரோனா மருத்துவமனை வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி இரவில் இருந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 25000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுவரும் இந்த மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 1000 பேர் சிகிச்சை பெறலாம். கொரோனா நோயாளிகள் மற்ற நோயாளிகளுடன் சேர கூடாது என்பதற்காக இந்த துரித நடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டுள்ளது .

Like Us on Facebook Dinkaran Daily News
  • alangaa_jaallii

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  • stalinnnraa

    மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

  • 16-01-2021

    16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்